×

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக அதிமுக பாஜக உள்பட 31 பேர் போட்டி சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு இறுதி வேட்பாளர் பட்டியல் வௌியீடு

திருவண்ணாமலை, மார்ச் 31: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், திமுக, அதிமுக, பாஜக உள்பட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. அதைத்தொடர்ந்து, 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 37 பேரில, நேற்று 6 சுயேட்சைகள் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். எனவே, திருவண்ணாமலை தொகுதியில் 31 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் இடம பெற்றுள்ளனர்.

ேமலும், தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேர்தல் பார்ைவயாளர் மகாவீர் பிரசாத் மீனா ஆகியோர் முன்னிலையில், சுயேட்ைச வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் பங்கேற்றனர். அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் சி.என்.அண்ணாதுரை(திமுக), எம்.கலியபெருமாள் (அதிமுக), ஏ.அஸ்வத்தாமன்(பாஜக), மோகன்ராஜா(பகுஜன் சமாஜ்), ரமேஷ்பாபு (நாம் தமிழர்), அக்னி செல்வரசு (நாடாளும் மக்கள் கட்சி), காளஸ்திரி (அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி), சத்தியமூர்த்தி (மக்கள் நலக்கழகம்), செல்வம் (வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி), சேட்டு (வீரோ கீ வீர் இந்தியன் கட்சி), பென்னிராஜன் (பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி) மற்றும் சுயேட்சைகள் அ.அண்ணாதுரை, எஸ்.அண்ணாதுரை, செ.அண்ணாதுரை, உதயகுமார், அ.கலியபெருமாள், மு.கலியபெருமாள், கோதண்டபாணி, கவுதம், சங்கர், செந்தமிழ்செல்வன், தங்கராஜ், தீபம்மாள் சுந்தரி, நக்கீரன், நல்லசிவம், பழனி, பூங்கொடி, ரமேஷ், விமல், விஜயகுமார், ஜெகந்நாதன்.

உள்பட 31 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதியில் 31 பேர் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுக, பாஜக கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிக பட்சம் நோட்டோவுன் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். எனவே, 15 வேட்பாளர்களுக்கும் அதிமானோர் தேர்தலில் போட்டியிட்டால், கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பேலட் யூனிட்) பயன்படுத்த வேண்டும். அதன்படி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக அதிமுக பாஜக உள்பட 31 பேர் போட்டி சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு இறுதி வேட்பாளர் பட்டியல் வௌியீடு appeared first on Dinakaran.

Tags : DMK ,AIADMK ,BJP ,Tiruvannamalai ,Lok Sabha ,Thiruvannamalai ,Thiruvannamalai Lok Sabha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...